Idhayam Matrimony

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      இந்தியா
Vande-Bharat-Rail 2023-10-0

ஜம்மு, காஷ்மீரின் கத்ரா பகுதியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 19-ல்  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.  ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். எனினும், ஜம்மு ரெயில்வே நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தொடக்கத்தில், கத்ரா பகுதியில் இருந்து ரெயில் சேவை செயல்படும். 

இதுபற்றி ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ஏப்ரல் 19-ந்தேதி உதாம்பூருக்கு பிரதமர் மோடி வருகை தருவார். உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த ரெயில் பாலம் பகுதிக்கு வந்து அவர் சேவையை தொடங்கி வைப்பார். இதன்பின்னர், கத்ரா பகுதியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான நேரடி ரெயில் இணைப்புக்கான நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும். தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சங்கல்தான் மற்றும் பாராமுல்லா இடையேயும் மற்றும் கத்ராவில் இருந்து நாடு முழுவதுமுள்ள பகுதிகளுக்கும் ரெயில் சேவை இருந்து வருகிறது.

ரெயில் சேவையால் காஷ்மீரை இணைக்கும்  நோக்கத்துடனான இந்த திட்டம், 1997-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டபோதும், புவியியல், வானிலை மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சவால்களால் அதன் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வந்தன. ஆற்றுப்படுகையில் இருந்து 359 மீட்டர் உயரம் கொண்ட 'செனாப்' பாலம் உள்பட பல பாலங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 'செனாப்' பாலம், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தில் இருந்து கூடுதலாக 35 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பாலம், உலகின் மிக உயர்ந்த ரெயில் பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து