முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்: சீமான் மீது அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : திரவுபதி அம்மன் கோவில் விவகாரத்தில் சீமான் அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள பாரம்பரிய விக்டோரியா அரங்கத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்பட உள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து அதை செய்வதற்கு காலம் கனிந்து வருகின்றபோது அதற்கு ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகம் செய்கிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வெகு விரைவில் திரவுபதி அம்மன் கோவில் மக்கள் தரிசனத்திற்கு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து