Idhayam Matrimony

கள்ளநோட்டு விவகாரம்: வி.சி.க. பொருளாளர் நீக்கம்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில்  கட்சியின் மாவட்ட பொருளாளரை  நீக்கி திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வி.சி.க. கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து