Idhayam Matrimony

பாம்பன் ரயில் பாலம் திறப்பிற்கு பிரதமர் வருகை: மண்டபம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
Aarmy 2025-03-31

Source: provided

ராமேஸ்வரம் : பாம்பன் கடலில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில் செங்குத்து தூக்கு பாலத்தை திறந்தும், ரயில் சேவை துவங்கி  வைப்பதற்காக  மதுரையிலிருந்து  ஹெலிகாப்டர் மூலம்  பிரதமர் மோடி வருகை தரவுள்ளதையொட்டி மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் ராணுவ  ஹெலிகாப்டர்கள் ஒத்திகை நேற்று நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மணல் பரப்பும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் புதியதாக இரண்டாவது ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த ரயில் பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் செங்குத்தான மேல் நோக்கி தூக்கு பலமும் அமைக்கப்பட்டுள்ளது இந்த தூக்கு பாலத்தை தூக்கியும் ரயில் சேவையை மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு துவங்கி வைப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி வரும் (ஏப்ரல்) 6-ம் தேதி வருகை தர உள்ளார். 

மதுரையிலிருந்து ராணுவ  ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திற்கு  வருகை தந்து அங்கு இருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திலிருந்து செங்குத்து ரயில் பாலத்தை திறந்து வைத்தும்,ரயில்கள் சேவையை துவக்கி  வைத்துவிட்டு ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், துவக்க விழா நிகழ்ச்சிக்கும் செல்கிறார் அதன் பேரில்  நேற்று திங்கட்கிழமை பகலில்  ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் ஹெலிகாப்டர்கள் இறங்கும்  ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் கோவை சூலூர் விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 எண்னுடைய  2 ஹெலிகாப்டர்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் அருகே ஐ.என்.எஸ் பருந்து விமானத்தளத்தில் வந்து அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் கேம்ப்  பகுதியில் அமைந்துள்ள  ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திற்கு முதலில் ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அதன் பின்னர்  இறங்கும் தளத்தில்  இந்திய  ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு  பாதுகாப்பு குறித்து 20 நிமிடம்  ஆலோசனை நடத்தினார்கள். 

அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர் ஒருவர் மானிட்டர் கருவியுடன் இறங்கி விமானம் தளத்தை மானிட்டர் கருவி வைத்து சோதனை நடத்தினார் அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு ஹெலிகாப்டர்கள் சென்றது.அதன் பின்னர் இரண்டாவதாக மற்றொரு ராணுவ  ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. 6  நிமிடம் இறங்கும் தளத்தில் விமானம் நின்று அதன் பின்னர் புறப்பட்டு மதுரைக்கு  சென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து