முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக 5 விக்கெட்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      விளையாட்டு
Hyderabad 2024-05-25

Source: provided

ஐ.பி.எல். தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி அசத்தியது. டில்லி கேபிடல்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன் மூலம், டி20 போட்டிகளில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டில்லி கேபிடல்ஸ் அணிக்காக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு டில்லி கேபிடல்ஸ் அணிக்காக சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா முதல் வீரராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். தற்போது, அந்த வரிசையில் இரண்டாவது வீரராக மிட்செல் ஸ்டார்க் இணைந்துள்ளார்.

___________________________________________________________________________

எம்.எஸ்.டோனிக்கு கவுரவம்

கவுகாத்தியில்  நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.டோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது. ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் டோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார். 

___________________________________________________________________________

விஜய் சங்கர் புதிய சாதனை

ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சி.எஸ்.கே. அணிக்கு திரும்பிய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (3,591 Days) விஜய் சங்கர் (3,974 Days) முறியடித்தார். 2014ல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

___________________________________________________________________________

இந்தியாவை வீழ்த்தியது பிரேசில்

பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து