முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்: சி.எஸ்.கே-வை முந்தியது ஆர்.சி.பி.

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

சென்னை : இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்தொடரும் ஐ.பி.எல். அணிகளில் சி.எஸ்.கே-வை ஆர்.சி.பி முந்தியது.

ஐ.பி.எல். தொடர்... 

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

அதிக ரசிகர்கள்...

இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது. அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.

ஆர்.சி.பி  சாதனை... 

இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐ.பி.எல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது. அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து