முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை: பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      விளையாட்டு
Stephen Fleming 2024-04-20

Source: provided

சென்னை : டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி பயிற்சியாளர்  ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

முதல் வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் பினிஷராக செயல்படும் டோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சி.எஸ்.கே. அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

முன்பு போல் இல்லை...

டோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:- அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை டோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.

மதிப்பு மிக்கவர்...

இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார். நான் கடந்த ஆண்டே கூறினேன், டோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார் என்று பிளெமிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து