முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிப்பு: 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
Toll-booth 2023-09-01

சென்னை, தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படிரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து