முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென் அவர்ஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
Ten-Hours 2025-04-21

Source: provided

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக அதே போலிசுக்கு தகவல் வருகிறது. விசாரனையில் 

புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கும் சிபி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘டென் ஹவர்ஸ்’.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சிபி சத்யராஜ், காக்கி உடையில் மிடுக்காகவும், துடிப்பாகவும் நடித்திருக்கிறார். கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

 கதை முழுவதும் இரவில் நடந்தாலும், இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கு பாராட்டுக்கள்

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆரம்பத்திலேயே திரைக்கதையோடு பார்வையாளர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறது. கிளைமாக்சை யூகிக்க முடியாதபடி இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள் திரைக்கதையை அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘டென் ஹவர்ஸ்’ சிறந்த கிரைம் திரைப்படம் எனலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து