முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
Pope-Francis 2023 04 02

சென்னை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ:  12 ஆண்டுகள் வாட்டிகன் திருச்சபைக்குத் தலைவராக இருந்த போப்பரசர், உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்றும், சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருள்மொழி வழங்கிய போப்பரசரின் மறைவு அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.  

செல்வப்பெருந்தகை:  முற்போக்கான கருத்துகள் கொண்டவராகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பவராகவும் அறியப்பட்டவர். கத்தோலிக்க மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வந்தவர்.  பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது போப் ஆண்டவர் பதவியில் இருந்த காலத்தில் மதங்களுகிடையேயான உரையாடலை ஆதரித்ததோடு, மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். மதரீதியான கசப்புகளையும், வெறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர். அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்காக வாதாடியவர்.  

அன்புமணி ராமதாஸ்:  உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட போப் பிரான்சிஸ், தமது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர். ஈஸ்டர் திருநாளையொட்டி,  செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்களுக்கு ஆசி வழங்கும் போதும் உலகில் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தான் வேண்டினார்.  போப் பிரான்சிஸ் அவர்களை இழந்து வாடும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சோகத்தின் நானும் பங்கு கொள்கிறேன்.  

ராமதாஸ்:  கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குருவாக 12 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ், கிறித்தவ மக்களையும் கடந்து உலகில் அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார். சமயத்தைக் கடந்து நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டவர். உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த அவரது மறைவு உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து