முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வோரை நாங்கள் எதிர்க்கிறோம் - சீனா

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      உலகம்
Xi-Jinping 2

Source: provided

சீனா : சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது. பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இந்நிலையில் வரிச் சுமையை குறைப்பதாக கூறி சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் 'சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் (வர்த்தக) ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து