முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "புனித திருத்தந்தை பிரான்சிஸ்  வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து