முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகும் கேங்கர்ஸ்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
Gangsters 2025-04-21

Source: provided

Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில், காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, A.C.S மருத்துவக் கல்லூரி அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. 

விழாவில் இயக்குநர் சுந்தர் சி பேசுகையில், ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாரையும் வைத்து ஒரு படம் பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கான தலைப்பு பற்றி விவாதித்த போது வடிவேல் சொன்ன தலைப்புதான் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் என்றார். பின்னர் வடிவேலு பேசியதாவது… இயக்குனர் சுந்தர் சி ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது என்றார். “சிங்காரம்” எனும் கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும், 

இப்படத்தில் கேத்தரின் தெரேசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, S மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து