முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,25,000 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Anbil 2

சென்னை, மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அறிவிப்புகள் பின்வருமாறு:

  •  சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக  நியமிக்கப்படுவார்கள்.
  • மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
  • தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
  • தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ. 4.94 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.
  • மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
  • அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 வழங்கப்படும் லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
  • பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து