முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      உலகம்
President -2025-04-26

வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று வாடிகன் சென்றார். இரண்டு நாள் பயணமாக வாடிகன் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜோசுவா டி ஜோசுவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாடிகனின் புனித பீட்டர் பசிலிக்காவில் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து