முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே. அணியில் ஏகப்பட்ட ஓட்டைகள்: தோனி ஆதங்கம்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024 11 13

Source: provided

சென்னை : சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே.வின் தோல்வியைத் தொடர்ந்து தோனி ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம் ஆனால் பலரும் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம் எனக் கூறியுள்ளார்.

4-ஆவது தோல்வி...

ஐ.பி.எல். போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் தோற்றது. சொந்த மண்ணில் இது சென்னைக்கு 4-ஆவது தோல்வியாகும்.

போதுமானதாக இல்லை...

இது குறித்து சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பேசியதாவது: முதல் இன்னிங்ஸில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. 155 ரன்கள் போதுமானதாக இல்லை. ஏனெனில் பிட்சில் பெரிதாக பந்து திரும்பவில்லை. உண்மைதான், 8-10ஆவது ஓவர்களுக்குப் பிறகு பிட்ச் இரண்டு விதமாக செயல்பட ஆரம்பித்தது. ஆனால், பெரிதாக வித்தியாசமாக இல்லை. எங்களது சுழல்பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் சிறப்பாக பந்துவீசினார்கள். கூடுதலாக 15-20 ரன்கள் அடித்திருக்கலாம். சுழல்பந்து வீச்சாளர்கள் வரும் தடுமாறி இருந்தோம். டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார். அவர் விளையாடியது போலத்தான் மிடில் ஆர்டரில் எங்களுக்கு தேவைப்பட்டது.

ஓட்டைகளை அடைப்பது... 

ஒன்று நீங்கள் அடிக்க வேண்டும் அல்லது பார்ட்னர்ஷிப்பாவது அமைக்க வேண்டும். உங்களுக்கு சௌகரியமான இடங்களில் பெரிய ஷாட்டுகள் அடிக்கடி அடிக்க வேண்டும். இந்த மாதிரி தொடர்களில் ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைப்பது மாதிரி இருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம்.

சூழ்நிலைக்கு ஏற்ப... 

அதிகமான வாய்ப்புகள் அளித்தும் ஒருவர் சரியாக விளையாடாததால் மற்றவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் நால்வரும் சரியாக விளையாடாமல் இருந்தால் மேலும் மாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது. அப்படியே செல்ல முடியாது. ஏனெனில், ஆட்டம் மாறிவிட்டது. ரன்கள் குவிக்காவிட்டால் கடினம். எப்போதுமே 180-200 ரன்கள் அடிக்க வேண்டுமெனக் கூறவில்லை. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து