முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      உலகம்
POPE 2025-04-26

Source: provided

வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர். நேற்று மதியம்  மணியளவில், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் தொடங்கின. வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி செய்துவைக்கப்பட்டது.

வாடிகன் சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் இறுதிச் சடங்கும், ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோரே பசிலிகாவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கமும் செய்யப்படவிருக்கிறது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். 50 நாடுகளின் தலைவா்கள் உள்பட 130 முக்கியப் பிரதிநிதிகள் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர். வாடிகனில் நடைபெறும் போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரோம் நகருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா். அவரது உடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்திய நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து