முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் நலம் விசாரித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்ட கூட்டத்தொடர் வரும் ஏப்.29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. சனிக்கிழமை கேள்வி நேரத்தின் போது பல்வேறு துறை அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியில் செல்ல முயன்றார். அவர் இரு மேசைகளுக்கு இடையே குறுகலான வழியில் நுழைந்து செல்லும்போது காலை சுமார் 10.28 மணி அளவில் கால் இடறி கீழே விழுந்தார்.

அதை பார்த்ததும் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் அனைவரும் பதறியபடி அவரை நோக்கி சென்றனர். பின்னர் அவரை தூக்கி நிற்க வைத்தனர். அதன் பின்னர் அவராகவே நடந்து வந்து, தனது இருக்கையில் அமர்ந்து, குடிநீர் அருந்தினர். அப்போது அருகில் அமர்ந்திருந்த உதயநிதி, ‘இப்போது உடல் எப்படி இருக்கிறது?’ என துரைமுருகனிடம் கேட்டறிந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். ‘ஏன் அப்படி நேரிட்டது?’ என கேள்வி எழுப்பினார். அப்போது துரைமுருகன், தான் நலமாக இருப்பதாகவும், எழுந்து சென்றபோது கால் இடறி கீழே விழுந்துவிட்டதாகவும் விளக்கினார். இதனால் அவையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதிலுரையைத் தொடர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து