முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்குப்பின் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். விழாவின்போது நேற்றுமுன்தினம் சாமி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பைக்கில் மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. 

இந்த சம்பவத்தில் செல்வராஜ் (வயது 29), தமிழ்செல்வன் (வயது 11), கார்த்தி (வயது 11) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், லோகேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலம் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து