முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது: ரிங்கு சிங்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      விளையாட்டு
Ringu-Singh 2023-12-19

Source: provided

 கொல்கத்தா : இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

200+ ரன்கள்...

கடந்த ஐ.பி.எல். சீசனிலிருந்து ஐ.பி.எல். போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிகமாக அணிகள் ரன்கள் குவிப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் மிகவும் எளிதாக 250 ரன்களுக்கும் அதிகமாக அதிக முறை ரன்கள் குவித்தனர். ஐ.பி.எல். தொடரில் எந்த அணி 300 ரன்களை முதலில் குவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

300 ரன்கள் சாத்தியம்...

ஒரு இன்னிங்ஸில் அணிகள் 300 ரன்கள் குவிக்கும் நிலையை ஐ.பி.எல். தொடர் எட்டிவிட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். 300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். தொடர் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடித்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும் என்றார்.

இம்பாக்ட் பிளேயர் விதி...

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 250 ரன்களுக்கும் அதிகமாக மூன்று முறை ரன்கள் குவித்தது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அதன் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்தது. அணிகள் அதிக ரன்கள் குவிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து