முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது வெற்றிக்கான ரகசியம்: மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      விளையாட்டு
West-Indies 2024-05-09

Source: provided

லக்னோ : ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.

377 ரன்கள்... 

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடர் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 377 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன், விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்களில் நிக்கோலஸ் பூரன் ஒருவரின் ஸ்டிரைக் ரேட் மட்டுமே 200-க்கும் அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 200-க்கும் குறைவாகவே உள்ளது.

சொந்த ஆடுகளங்களைப் போல...

கரீபியன் தீவுகளில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இந்தியாவிலும் ஆடுகளங்கள் இருப்பதே தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இங்குள்ள ஆடுகளங்கள் எனது சொந்த மண்ணில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இருக்கின்றன. கரீபியன் தீவுகளின் ஆடுகளங்களில் அதிக அளவிலான பௌன்சர்கள் இருக்காது. இங்குள்ள ஆடுகளங்கள் உண்மையில் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளங்கள். இந்தியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஊக்கமளிக்கிறார்கள்.

ஒரு ரகசியமும் இல்லை...

பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர் விளாசுவதற்காக வேகமாக பேட்டினை சுழற்ற தனியாக எந்த ஒரு பயிற்சியும் நான் மேற்கொள்வதில்லை. வேகமாக பேட்டினை சுழற்றுவது எனக்கு இயல்பாகவே வருகிறது. பேட்டினை வேகமாக சுழற்றுவதன் பின்னணியில் எந்த ஒரு ரகசியமும் இல்லை. பேட்டினை எப்படி வேகமாக சுழற்றுகிறீர்கள் என்ற கேள்வி என்னிடம் மில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளது. பேட்டினை வேகமாக சுழற்ற ஒருபோதும் தனியாக எந்த ஒரு பயிற்சியையும் நான் மேற்கொண்டதில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து