முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அடக்கவிலை சிற்றுண்டி உணவகங்கள்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.23 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் பணி செய்வோர் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைத்திட 1000 சிற்றுண்டி உணவகங்கள் திறக்கலாம் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி தீர்மானத்தை விளக்கி மேயர் சைதை துரைசாமி பேசினார் தீர்மான விபரம் வருமாறு:- மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் அன்றாடக் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம், உணவுமுறை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக உள்ளது.

கூலி வேலை செய்யும் மக்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையில் வெளியில் விற்கும் உணவுப்பொருட்களையே வாங்கி உட்கொள்கின்றனர்.

சென்னை மாநகரில் ஒரு நாளில் நடமாடும் மக்கள் தொகை 10 லட்சம் ஆகும். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்டு வாழும் ஏழை எளிய மற்றும் வறுமையில் பசியால் வாடும் மக்களின் சுகாதார மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக இடங்களை தேர்வு செய்து சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்கிட 1000 சிற்றுண்டி உணவகங்களை ஏற்படுத்திட திட்டமிட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், தினசரி வேலைக்கு செல்லும் பணியாளர்கள், தள்ளு வண்டி, கைவண்டி மற்றும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் ஆகியோர் பயனடைவார்கள்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாழும் ஏழை, எளிய மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 1000 சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என்ற அறிவிப்பின் மீது கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சிற்றுண்டி உணவகங்கள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்தல், உணவு தயார் செய்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் / தேவையான மின் இணைப்பு வசதி (ம) கழிவுநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக ஒரு குழுவினை கீழ்க்காணும் அலுவலர்களை கொண்டு அமைத்து பணிகளை மேற்கொள்ளலாம். இக்குழு 1000 சிற்றுண்டி உணவகங்களை செம்மையாக நடைபெறுவதற்கு அனைத்து வகையிலும் பொறுப்பேற்கும்.

மாநகர நல அலுவலர், மாநகர கூடுதல் சுகாதார அலுவலர், வருவாய் அலுவலர், மண்டல அலுவலர்கள்,

சமையற்கூடங்களில் வேலை செய்வதற்கும், உணவுகளை எடுத்துச் செல்வதற்கும் சுய உதவிக்குழுக்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகரில் சாலையோரங்கள், உட்புற சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சிற்றுண்டி உணவகங்கள் நடத்துவோரின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த சிற்றுண்டி உணவகங்களில் விற்கப்படும் கீழ்கண்ட உணவுப்பண்டங்களான காலை - இட்லி, மதியம் - சாம்பார் சாதம், தயிர் சாதம், சாப்பாடு.

ஆகியவை அடக்க விலையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது இதற்கான அரிசி எண்ணெய் பருப்பு வகைகள் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் ஏற்ப்பாடு செய்யப்படும் தமிழக முதல்வர் பிறந்த நாளை உலக சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு தினமாக கொண்டாடுகின்ற இந்த வேளையில் உறுபசியும் ஒவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு என்னும் வள்ளுவம் வழியில் தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கும் இந்த தாயுமானவர் தொண்டு திட்டத்தை எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பரந்த நோக்கமுடைய விலையில்லா அரிசி தந்த தமிழக முதல்வர் பெயரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பொது சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 1000 அடக்க விலை சிற்றுண்டி உணவகங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, தொடக்கத்தில் 200 இடங்களில் பரிட்சார்த்தமாக திறப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago