முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      சினிமா
Kerala-High-Court 2023-10-0

கேரளா, எம்புரான் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்ககோரி மனு.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம், ‘எல் 2: எம்புரான்'. இதில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கலவரம் தொடர்பான காட்சிகள் குஜராத்தில் 2002-ல் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவகொள்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மோகன் லால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி, சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. இந்தப் படம், தேச விரோத விஷயங்களை ஊக்குவிப்பதாகவும் மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித் துள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கில். எம்புரான் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து