முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாள்கள் விடுமுறை

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Bank 2023 08 08

மும்பை, நாட்டில் உள்ள வங்கிக ளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது.  

நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள் முடிவடைந்ததை யொட்டி அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை விடப்பட்டது.

ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14 ஆம் தமிழ் புத்தாண்டு, 18 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாள்களும் விடுமுறை நாள்களாகும். அதேபோல், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது. வங்கிகளுக்கான விடுமுறை இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்.பி.ஐ.) தீர்மானிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள பல வங்கிகள் ஆண்டு விடுமுறை நாள்களைக் கடைப்பிடிக்கின்றன, அவற்றில் தேசிய விடுமுறை நாள்கள், மாநிலங்களில் குறிப்பிட்ட பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் ஆகியவை அடங்கும். அதன்படி, அன்றைய நாள்களில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் செயல்படாது. இதனால், பணப் பரிவர்த்தனைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது.

அதேவேளையில், இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி கணக்குகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என வங்கிகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று, பணம் செலுத்தும் இயந்திரங்கள் வாயிலாக டெபாசிட் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து