முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 கோடியில் 500 புதிய ஆவின் பாலகங்கள்: பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்க வெண் நிதி திட்டம் அறிமுகம்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
Raja-Kannappan

சென்னை, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் "வெண் நிதி" திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ரூ.9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1,437 கிளவுட் பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும். ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் பாலில் கலப்படத்தை கண்டறியும் 129 நவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவிகள் வழங்கப்படும். ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதியதாக தொடங்கப்படும்.

ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன், கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தரமான பால் கொள்முதல் செய்யத் தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு வழங்கப்படும்.

ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும். ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும். ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். ரூ.1.94 கோடி செலவில் உம்பளாச்சேரி இன பசுமாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும். ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகளில் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக 2,000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் "வெண் நிதி" திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் "ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி" உருவாக்கப்படும். தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து