முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கே மீது குற்றச்சாட்டு: பாராளுமன்றத்தில் இருந்து காங். எம்.பி.க்கள் வெளிநடப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      இந்தியா
Parliament-2024-11-27

புதுடெல்லி, வக்பு சட்ட திருத்த மசோதா  விவாதத்தின் போது கார்கே மீது குற்றம் சாட்டியதை கண்டித்து பாராளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம்தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேறியுள்ளது.  மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இந்த மசோதா .

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா நேற்று  தாக்கல் செய்யப்பட்டது. எனினும், வக்பு நில ஆக்கிரமிப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குடும்பம் ஈடுபட்டு உள்ளது என மக்களவையில் குற்றச்சாட்டாக கூறப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இதுபற்றி மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய பா.ஜ.க. உறுப்பினரான அனுராக் தாக்குர், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் குடும்பத்தினர் வக்பு நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறினார்.

கர்நாடகாவின் முன்னாள் பா.ஜ.க. தலைவரான அன்வர் மணிப்பாடி, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் தாக்கல் செய்த வக்பு ஊழல் பற்றிய குற்றச்சாட்டு அறிக்கையில், கார்கேவின் தொடர்பு உள்பட பல்வேறு அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு உள்ளார். இதனை சுட்டி காட்டி அனுராக் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் பதவியில் இருந்து விலக தயார் என கார்கே கூறினார். அப்படி குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் குற்றச்சாட்டை கூறிய உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில்  வக்பு திருத்த மசோதா தாக்கலான  நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து