முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 சதம் அடித்து சாதனை படைத்த டெண்டுல்கருக்கு 100 தங்கக் காசுகள் பரிசு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

மும்பை, ஏப். - 3  - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடுத்து புதிய உலக சாதனை படைத்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு பரி சாக 100 தங்கக் காசுகளை மும்பை கிரி க்கெட் சங்கம் வழங்குகிறது. டெண்டுல்கர் 99 - வது சதத்திலிருந்து 100 - வது சதத்தை எட்ட கடந்த ஒரு வருடமாக காத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இந்த புதிய மைல் கல்லை பதித்திருக்கிறார். டெண்டுல்கர் 99 - வது சதத்தில் இருந்த போது, அவர் 100 - சத சாதனை படைத் தால் அவருக்கு 100 பொற்காசுகள் பரி சாக அளிக்கப்படும் என்று மும்பை கிரி க்கெட் சங்கம் சார்பில் ஏற்கனவே அறி விக்கப்பட்டு இருந்தது நினைவு கூறத்த க்கது.
சச்சின் கடந்த மாதம் டாக்காவில் இந்த சாதனையை படைத்தார். அவருக்கு அளிக்கப்பட இருக்கும் 100 தங்கக் காசு களின் மதிப்பு ரூ. 23 - 25 லட்சமாகும். இந்த முடிவை மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ் முக் தலைமையி லான எம்.சி.ஏ. கமிட்டி மேற்கொண்டுள்ளது.  மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக க் குழுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் போது, மத்திய அமைச்சர் தேஷ் முக் இதனை அறிவித் தார். அப்போது இந்த விழாவிற்காக ஒரு தேதியை ஒதுக்கும் படி அவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு டெண்டுல்கரும் ஒப்புக் கொண்டார். இந்த விழாவிற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று எம்.சி.ஏ. இணைச் செயலாளரான நிதின் தலால் தெரிவித்தார்.
கடந்த மாதம் வங்கதேசத்தின் தலைநக ரான டாக்கா அருகே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 4 நாடுகள் பங்கேற்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி யில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது, டெண்டுல்கர் இந் த புதிய உலக சாதனையை புரிந்தார்.
டெண்டுல்கர் இதுவரை 463 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த சதம் 49 -வது சதமாகும்.
தவிர, 38 வயதான சச்சின் இதுவரை மொத்தம் 188 டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்கிறார். இதில் 51 சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
1989 -ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூலம் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார். சச்சின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தும் சாதனை படைத்து இருக்கிறார். தவிர, கிரிக்கெட் போட்டி களில் பல சாதனைகளை அவர் முறிய டித்து இருக்கிறார். ---------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்