முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அதிகாரிகள் மோதல் குறித்து விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.13 - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்த ஒரு மோதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் சில அதிகாரிகளுக்கும் சில வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 4 ராணுவ வீரர்களும் 2 அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சுடும் இடத்தில் இந்த மோதல் நடந்ததுள்ளதாகவும் இது ஒரு லேசான தகராறு என்றும் ராணுவம் கூறியுள்ளது. 

என்றாலும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இந்த மோதலுக்கு ஒரு ராணுவ வீரர்தான் காரணம் என்ற தகவலை  ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியை இந்த ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனால்தான் இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுவதையும் ராணுவம் மறுத்துள்ளது. மேலும் கவச வாகனங்களின் கட்டுப்பாடுகளை ராணுவ வீரர்கள் பறித்துக்கொண்டு புரட்சி ஏற்படுத்த முயன்றதாக வெளியான தகவல்களையும்  ராணுவம் மறுத்துள்ளது.

ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ராணுவ அதிகாரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியின்  கணவரும் ராணுவ மேஜருமான இன்னொரு அதிகாரி அடித்து உதைத்ததாகவும் அதனால் இந்த மோதல் நடந்ததாகவும் வெளியான செய்திகளையும் ராணுவம் மறுத்துள்ளது.

ஒரு அதிகாரிக்கும் ஒரு வீரருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்