முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்படப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 15 - சட்டத்திற்கு புறபாக கலப்படப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சகாயம் கூறினார். மதுரை நேரு நகர் 2-வது தெருவை சார்ந்த கண்ணன் , ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் போலி டீத்தூள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில் இணை இயக்குனர், வேளாண்மை (பொறுப்பு) ஜெய்சிங்ஞானதுரை, உதவி இயக்குனர் கலால், ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவின் பேரில் நேற்று நேரடியாக சம்மந்தப்பட்ட நபர் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து போது போலியான டீத்தூள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறுதிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவ்டட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை சீல் வைத்து 10 டன் எடையுள்ள சுமார் ரூ.15, லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள்கள் மற்றும் அதனை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒருவேன், இண்டிகா கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இது குறித்து கலெக்டர் கூறுகையில், சம்மந்தப்பட்ட நபர் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எதிர்காலத்தில் இதுபோன்று கலப்படப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்