முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறுதேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 23 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 24 - மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்ட தொடருக்காக கடந்த மூன்று மாதங்களாக மாநிலங்களவை செயல்பட்டு வந்தது.  மாநிலங்களவையின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததாக மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய பணிகளை மாநிலங்களவை நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் சில சமயங்களில் அவை நடவடிக்கைகளில் குறுக்கீடு ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், இதனால் கேள்வி நேரம் இடம் பெறாத சூழல் உருவானது என்றார்.
மொத்தம் 35 தினங்கள் மாநிலங்களவை செயல்பட்டது. இதில் கடந்த 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் 60 ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கூட்டமும் அடங்கும் என்றார். அவை நடவடிக்கைகள் மொத்தம் 165 மணி நேரம் நடைபெற்றது. இருப்பினும் இலங்கையில் நடைபெற்ற வன்முறை, நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் முறைகேடு, ராணுவ தளபதியிடம் லஞ்சம் அளிக்க முற்பட்ட வழக்கு மற்றும் தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவை நடவடிக்கைகள் 22 மணி நேரம் முடங்கியதாக அவர் கூறினார்.
மாநிலங்களவையின் பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற 58 உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டதும் இந்த கூட்டத் தொடரில்தான். இதில் மாநிலங்களவை துணை தலைவர் ரகுமான்கானும் அடங்குவார். அதே போல் புதிதாக 67 உறுப்பினர்களும் பொறுப்பேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்