முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் காங்., நடவடிக்கைகள் மோசம்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் நடவடிக்கைகள் மிகவும் மோசமானவை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து பேசினார் பின்னர் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:. ஜனாதிபதி தேர்தலுக்கு 16 மணி நேரத்திற்கு முன்பாக ஜனாதிபதி வேட்பாளர் பெயரை வெளியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதே. 

முதலமைச்சர் பதில் : உள்துறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் அத்வானி சென்னை வந்தார். என்னை சந்திக்க விரும்பினார்.உங்களுக்கு தருவதற்கு என்னிடம் சிறப்பு செய்தி வேறு எதுவும் இல்லை.

கேள்வி தேசியஜனநாயக கூட்டணி நாளை கூடுகிறது ஜனாதிபதி தேர்தல் பிரச்சனையில் அ.தி.மு.கவின் நிலை என்ன?

ஜெயலலிதா பதில்: நான் என்ன சொன்னேன் என்ன சொல்லவேண்டும் என்பதையெல்லாம் எல்.கே.அத்வானி சொல்லிவிட்டார். அத்வானி மரியாதைக்குரிய மூத்த தலைவர் பாஜகவின் முக்கிய தலைவர் நான் என்னுடைய கட்சியின் தலைவர் ஆகையால் நாங்கள் சந்திப்பது இயல்பானது. நாங்கள் இருவரும் சந்தித்த போது ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசித்தோம். இந்த சூழ்நிலையில் இதைத் தவிர நான் வேறு எதுவும் உங்களுக்கு சொல்ல இயலாது.

கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த பிரச்சனையை மோசமாக கையாளுகிறது என்று அத்வானி கூறியுள்ளாரே.

ஜெயலலிதா பதில்: அது உண்மை காங்கிரஸின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மிகவும் மோசமானது என்பதை நேற்று நடந்த நிகழ்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

கேள்வி: பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி கருதுகிறது. ஆகையினால் 2014 வரையில் மன்மோகன் சிங் பிரதமாராக நீடிப்பாரா என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அவர்கள் அவ்வாறு நீடிக்க விடுவார்களா?

பதில்ச எந்தவகையான ஊகங்களிலும் தலையிட நான் விரும்பவில்லை. யார் பொருத்தமான வேட்பாளர் என்று இதுவரையில் யாரும் உறுதியாக தெரிவிக்கவில்லை.ஆகையினால் நான் இது குறித்து ஆர்வம் செலுத்துகிறபோது அல்லது குறிப்பாக உங்களுக்கு ஏதாவது சொல்லவேண்டியிருந்தால் சொல்வேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்