முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைவிமர்சனம் ''துப்பாக்கி''

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ,18  - ராணுவ எல்லைப்பகுதியான வடபுலத்திலிருந்து தனது சொந்த ஊர் மும்பைக்கு வருகிறார் விஜய். இவர் உளவுத்துறையில் சிறப்பு அதிகாரி. விஜய்க்கு மும்பையில் காஜல் அகர்வாலுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது ஒரு பூங்காவில் சிலரை குண்டுவைத்து கொலை செய்கிறார்கள். இந்த கொலைகாரர்களை தேடி கண்டுபிடிக்கும்போது அவர்கள் தீவிரவாதிகள் என தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெரிய அளவில் குண்டுவைத்து மும்பை  நகரை தகர்க்க திட்டம் தீட்டுவதையும், இந்த தீவிரவாதிகளுக்கு பின்னால் ஒரு பெரிய நெட்ஒர்க் இருப்பதையும் விஜய் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவர்களை பிடிக்க மும்பையில் வசித்து வரும் போலீஸ் அதிகாரி சத்யம் உதவியுடன் கையில் துப்பாக்கி எடுக்கிறார். முடிவில் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டார்களா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

தீவிரவாதிகள் கதை என்றாலும், சமூக அக்கறையோடு திரைக்கதை  அமைத்து அதிக துப்பாக்கி சத்தம் காதை பிளக்காமல் கவனமாக காட்சிகளை கையாண்டுயிருக்கிறார். இயக்குனர் முருகதாஸ். கதைக்கு பொருத்தமான தேர்வு விஜய் குறை சொல்ல இடமில்லை. காஜல் அகர்வாலுடன் காதல் காட்சிகள். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னுடைய தங்கையை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருக்கும் போது கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் சாதுரியமாக தங்கையை மீட்கும்போது விஜய் கைதட்டல் பெறுகிறார். இதேபோல பல இடங்களில் ரசிகர்களின் கைதட்டலுக்கு இடம் இருக்கிறது. நாயகி காஜல் அகர்வால் கவர்ச்சியாக வந்துபோனாலும் தனது பாத்திரத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார். சத்யம் இந்த படத்தில்தான் வாய்பூட்டுப்போட்டு அளவோடு டயலாக் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர்களுடன் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிகளையும் அழகுபடுத்தியிருந்தாலும், கூடுதலாக விஜயை அழகுப்படுத்தியிருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி ஒகே. படத்துக்கு இன்னொரு மைனஸ் காமெடியில்லாதது. வி கியேஷன்ஸ் சார்பில் கலைப்புலிதாணு தயாரித்துள்ளார். ஜெமினி சர்க்யூட் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். எழுத்து இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ், துப்பாக்கி தீவிரவாதிகளை சுட்டு மனதில் நிம்மதியை தந்ததுபோல தீபாவளிக்கு ரசிகர்களுக்கு பட்டாசு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வெற்றிபட இயக்குனருக்கும், நடிகருக்கும் மேலும் ஒரு வாகை மலர் துப்பாக்கி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்