முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - சீன பிரதமர்கள் சந்திப்பு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

பினோம் பெங்,நவ.20 - இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சீன பிரதமர் வென் ஜியாபோவும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது இந்தியா-சீனா இடையே நல்லுறவு நிலவுகிறது என்றும் இதை மேலும் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். 

கம்போடியாவின் தலைநகர் பினோம் பெங்கில் ஆசியான் மற்றும் கிழக்காசியா நாடுகளின் உச்சிமாநாடு 3 நாள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா நாடுகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா சார்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் சீனா சார்பாக பதவி விலகப்போகும் பிரதமர் பென் ஜியாபாவோம் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டின் ஒரு நிகழ்ச்சியாக இருவரும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையே உறவு நல்ல முறையில் இருக்கிறது என்றும் இதை மேலும் பலப்படுத்தவும் ஸ்திரமாக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்தனர். கடந்த 8 ஆண்டுகளாக நானும் பிரதமர் மன்மோகன் சிங்கும் 14 முறை சந்தித்து பேசியுள்ளோம். அப்போது இருவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்று சீன நாட்டு பிரதமர் வென் ஜியாபாவோ தெரிவித்தார். நாங்கள் இருவரும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டோம். இந்த நல்லுறவானது இருநாடுகளிடையே நல்லுறவு நிலவுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இந்தியா-சீனா இடையே நல்லுறவு ஏற்படுவதற்கு வென் ஜியாபாவோ தனிப்பட்ட முயற்சிகளை எடுத்தார் என்று மன்மோகன் சிங் பாராட்டினார். கடந்த 2005 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வென் ஜியாபாவோ வருகையால் இருநாடுகளிடையே எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்பட்டது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

பிரதமர் மன்மோகன் சிங்கும் சீன பிரதமர் வென் ஜியாபாவோம் சந்தித்து பேசுவது கடைசியாக இருக்கலாம். சீன பிரதமர் வரும் மார்ச் மாதத்தில் பதவி விலகுகிறது. அதற்குள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்