முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி வெளியுறவு அமைச்சர் டெர்ஜி ராஜினாமா

புதன்கிழமை, 27 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ரோம்,மார்ச்.28 - இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்களை இந்தியாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார். கேரள கடலில் மீன்படித்துக்கொண்டியிருந்த மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக இத்தாலி நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மஸ்ஸிமலியானோ லதோர் மற்றும் சல்வதோரே கிரோனே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கேரள கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். விழாவை கொண்டாடி விட்டு இந்தியாவுக்கு திரும்பினர். பின்னர் இத்தாலி நாட்டு பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இந்தத் தடவை அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். அவர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப இத்தாலி நாட்டு அரசும் மறுத்துவிட்டது. இதனையொட்டி இத்தாலி நாட்டு தூதர் இந்தியாவை விட்டு வெளியேற சுப்ரீம்கோர்ட்டு தடைவிதித்தது. இத்தாலிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியாவை எளிதாக யாரும் எண்ணிவிட வேண்டாம் என்றும் சோனியா காந்தியும் சாடினார். இந்த விவகாரத்தால் இந்தியா-இத்தாலி இடையே உறவு பாதிக்கும் நிலை உருவாகியது. இந்தநிலையில் இருநாட்டு இடையே தூதரக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் 2 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படாது என்று இந்தியா உத்தரவாதம் அளித்தது. அதனையொட்டி அந்த 2 தூதர்களும் இந்தியாவுக்கு திரும்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் தனிகோர்ட்டு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் அந்த இரண்டு பாதுகாவலர்களையும் திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குயிலியோ டெர்ஜி ராஜினாமா செய்துவிட்டார். அந்த இரண்டு கப்பல் பாதுகாவலர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நேற்று இத்தாலி பாராளுமன்றத்தில் டெர்ஜி அறிவித்தார். அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யவில்லை. அதனால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று டெர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்