முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்: பொறுப்புகளை தட்டிக்கழிக்கிறார் பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,மே.- 1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தனக்குள்ள பொறுப்புகளை முறையாக தட்டிக் கழித்து விட்டார். இது பிஏசி அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கூறினார்.  டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் பொறுப்புடன் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த விஷயத்தில் அவர் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தவறி விட்டார். இந்த முறைகேட்டில்  பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் நேரடியாக உடந்தையாக இருந்திருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. இதன் மூலம் இந்த முறைகேட்டில் அவர்களுக்கும் பங்கு இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பி.ஏ.சி வரைவு அறிக்கையில் குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றை உண்மைக்கு புறம்பானது என்றோ, ஆதாரமற்றது என்றோ பிரதமரால் கூற முடியுமா? அனுபவமிக்க முரளி மனோகர் ஜோஷியை ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் அவதூறாக பேசியுள்ளனர். கூட்டம் நடந்த போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஜோஷியை தரக்குறைவாக பேசியுள்ளனர். அறிக்கை வெளியான விவகாரம் குறித்து உயர் நிலை குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மக்களவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்