முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் யமுனையில் வெள்ளம்: 52 கிராமங்கள் நீரில் மூழ்கின

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

யமுனா நகர்,ஜூன்.18 - ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைச் சுற்றியுள்ள 52 கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. 

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து ராணுவ விமான்ப்படை, ராணுவம், மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக லாபரா கிராமத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது,

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இது வரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள கர்னால் பானிபட் சோனிபட் ஆகிய இடங்க்ளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்