முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை. 11 - மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 5 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இன்று 11 ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஆளும் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. 

பங்குரா, மேற்கு மிட்னபூர், குர்லியா மாவட்டங்களில் இந்த முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 58 ஆயிரத்து 865 இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 6,274 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இம்மாநிலத்தில் நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தல் 17 மாவட்டங்களில் நடக்கிறது. மொத்தம் 1.7 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

பெரும்பாலான பஞ்சாயத்துகள் மற்றும் ஜில்லா பரிட்சித்துகள் தற்போது இடது முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இ. கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்