முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் - ரேகா ஜோடி சேரும் படம்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, செப். 2 - 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்பச்சனும், ரேகாவும் ஜோடியாக சேர்ந்து நடிக்கிறார்கள். அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் கொடிகட்டி பறந்த காலத்தில் 1976 முதல் 81 ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளாக ஜோடி சேர்ந்து நடித்தவர் ரேகா. இந்த ஜோடி நடித்த தோ அஞ்சானே (76), முக்கந்தர்கா சிக்கந்தர் (78), மிஸ்டர் நட்வர்லால் (79), சுகாக் (79), சில்சிலா (81) ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை.

இந்த ஆண்டு காலத்தில் இவர்கள் இருவரையும் இணைத்து பேசப்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் பிரிந்துவிட்டனர். இப்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்பச்சனும், ரேகாவும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் அனீஸ் வெல்கம் பேக் என்ற பெயரில் நகைச்சுவை படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிகை ரேகாவையும் இணைத்து நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. இந்த படத்தில் ஆர்.டி.எக்ஸ் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இதில் வசதி படைத்த பேஷனிஸ்ட்டாக ரேகா. இதில் இருவரும் காதலிப்பது போல் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி டைரக்டர் அனீஸ் கூறுகையில், நான் ரேகாவின் தீவிர ரசிகன். அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். அவருக்கு இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரம். அவர் அதை சிறப்பாக செய்வார் என்றார். இந்த படத்தில் ஜான் ஆபிரகாம், நடிகை ஸ்ருதிஹாசன், நானா படேகர், அனில் கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்