முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் மீண்டும் தாக்குதல்: 96 பேர் உடல் சிதறி பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், செப். 23 - ஈராக்கில் சவ ஊர்வலத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 96 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லீம் பிரிவினருக்கு இடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்க படை வாபஸ் பெற்றதில் இருந்து தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. தலைநகர் பாக்தாத் வட கிழக்கு பகுதியில் உள்ள சடார் நகரத்தில் ஏராளமான ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லீம்கள் வசிக்கின்றனர். இங்கு பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்காக அமைக்கப்பட்ட சாமியானா பந்தலில் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். அப்போது பந்தலை நோக்கி திடீரென வந்த கார் வெடித்து சிதறியது.

அதே பகுதியில் தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டு உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 96 பேர் பலியாகினர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோரை மீட்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல்கொய்தாவுடன் தொடர்பு உள்ள சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்