முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, செப். 25 - இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரணாப் முகர்ஜி வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக பங்கேற்றார். தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக செய்தித்துறை மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சந்தோஷ்லால்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் துவகத்தில் இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாக குத்துவிளக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர் ஏற்றினர். பின்னர் தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தலைவர் கல்யாண் வரவேற்றார். நூற்றாண்டு விழா மலரை கவர்னர் ரோசைய்யா வெளியிட முதல் பிரதியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார். முன்னதாக பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்திய சினிமா நூற்றாண்டில் மிகப்பெரும் சாதனை செய்த பல்வேறு மாநிலங்கள், மொழிகளை சேர்ந்த திரைப்பிடத்துறை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

இந்திய சினிமாவின் நூற்றாண்டில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். 

அதன்பின்னர் விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகைகள் ஸ்ரீதேவி, ரேகா, வைஜெயந்தி மாலா, இயக்குனர் கே.பாலச்சந்தர், மது, அடூர் கோபாலகிருஷ்ணன், மம்முட்டி, மோகன்லால், அமிதாப் பச்சன், கிரண், பி.சாந்தாராம், அம்பரிஷ், விஷ்ணுவர்தன், அஞ்சலிதேவி, இயக்குனர் கே.விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பர்வதம்மா ராஜ்குமார், பாபு, கே.ராகவேந்திரராவ், விஜயேந்திரசிங்பாபு, பி.எஸ்.துவாரகேஷ், வி.ரவிச்சந்திரன், மாதவன் நாயர், சந்திரன், கிரண், ராஜேந்திரசென், ரமேஷ்சிட்டி, கமால்மர்ஜாட்டியா, வினாய்குமார் சும்லே, ஜாவித்அக்தர், ரமேஷ்தியோ, சீமாதியோ, அபர்ணாசென், கவுதம்கோஷ், பிரசன்சட்டர்ஜி, ரமேஷ்கணோடியா, பிரீத்சசப்ஸ்ரீ, உத்தம்மகன்தி, மனோஸ் திவாரி, சரிதா வாகிணி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். 

இதேபோல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்கமொழி, அசாம், போஜ்பூரி உள்ளிட்ட பிற திரைத்துறையினருக்கும் விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்