முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் இந்தியா - மே.இ. தீவு மோதும் 2-வது டெஸ்ட்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 14 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2_வது டெ ஸ்ட் போட்டி மும்பையில் இன்று துவங்க இருக்கிறது. 

மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெ றும் இந்த டெஸ்ட் போட்டி சச்சின் பங்கே ற்கும் 200_வது டெஸ்டாகும். இதனுடன் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச் சின் கிரிக்கெட்டில்  பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்துள்ளார். 

சச்சின் இதுவரை 199 டெஸ்ட் போட்டி களில் ஆடி, 15, 847 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்கள், 67 அரை சதங்கள் விளாசியுள்ளார். 69 சிக்சர்கள் பறக்க விட்டுள் ளார். அதிகபட்ச ஸ்கோர் 248. பேட்டிங் சராசரி 58.86. 

மும்பை வாங்க்டே மைதானத்தில் மே.இ.தீவுக்கு எதிராக இன்று துவங்கும் 2_வது   டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து அவர் விடைபெறுகிறார். 

40 வயதான சச்சினுக்கு இது 200_வது       டெஸ்ட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 

கொல்கத்தாவில் நடந்த 199_வது டெஸ்ட் போட்டியில் சச்சின் 10 ரன்கள் தான் எடுத்தார். போட்டியும் மூன்று நாட்களில் முடிந்தது. 

இதனால் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில் தான்  பிறந்த ஊரான மும்பை யில் சச்சின் அசத்துவார் என்று எதிர்பார் க்கப்படுகிறது. 

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாத னைகளை படைத்துள்ள சச்சின் கடைசி   டெஸ்டில் சதத்துடன் ஓய்வு பெற வேண்

டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். 

மும்பை கிரிக்கெட் சங்கமும் சச்சினை கௌரவிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து ள்ளது. முதல் கட்டமாக கண்டிவ்லி மைதா னத்துக்கு அவரது பெயரை சூட்டியது. 

அடுத்து சச்சினின் 24 ஆண்டு கால கிரிக் கெட் வாழ்க்கையின் சிறப்பான தருணங்க ளை பேனர்களாக வாங்க்டே மைதானம் முழுவதும் தொங்கவிட்டுள்ளனர். 

மும்பைக்கு  பெருமை சேர்த்த சச்சினின் போட்டோ மற்றும் அவரது 51 டெஸ்ட் சதங்களின் விவரத்தை போட்டிக்கான டிக்கெட்டில் பதிவு செய்துள்ளனர். 

மைதானத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலி லும் டெண்டுல்கரின் பிரமாண்ட கட் அவுட் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சச்சின் போட்டோவுடன் கூடிய பலூன்க ள் , அவரின் சர்வதேச சதங்கள் பற்றிய தக வல்கள் அடங்கிய பேனர்களும்  மைதானம் முழுவதும் அலங்கரிக்கப் போகிறது. 

கடந்த 2011 ல் வாங்க்டே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரின் பைனலுக்கு அளித்த பாதுகாப்பை விட தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக் க மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இதற்கிடையே இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று சச்சினை உற்சாகமாக வழி அனு ப்ப இந்திய வீரர்கள் முழு அளவில் தயா ராக உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்