முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் ஐ பேடுவை பால்வா பயன்படுத்த அனுமதிக்க கூடாது ஐகோர்ட்டில் டெல்லி அரசு வற்புத்தல்

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 28 - ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசிப் பால்வா ஐ பேடு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் டெல்லி அரசு மற்றும் திகார் சிறை அதிகாரிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயன் அடைந்த டி.பி.ரியால்டி புரமோட்டர் சாகிப் உஸ்மான் பால்வா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே ஊழல் குற்றச்சாட்டில் பால்வாவின் உறவினர் ஆசிப் பால்வாவும் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ பேடு பயன்படுத்த தமக்கு அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் ஆசிப் பால்வா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஆசிப் பால்வாவுக்கு ஐ பேடு வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தால் அதை தகவல் தொடர்புக்கு பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று டெல்லி அரசு மற்றும் திகார் சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஐ பேடுவில் சில கருவிகளை நீக்கினால் மட்டும் போதாது. அந்த கருவியை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதி எஸ்.முரளிதரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தகவல் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு புதிய கருவியை பால்வாவுக்கு வழங்குமாறு அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கேட்டுக்கொண்டார். இருதரப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தகவல் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு பைல்களை மட்டும் படிக்கும் அளவுக்கு ஒரு புதிய கருவியை பால்வாவுக்கு வழங்குமாறு நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்