முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை: ஹாங்காங்-கை வென்றது நேபாளம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 18 - 20_க்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேபாளம் 80 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது 

உலகக் கோப்பை 20 ஓவர்கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நேற்று முன் தினம் துவங்கியது. முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதின. 

பின்பு நடந்த 2_வது ஆட்டத்தில் நேபாளமும், ஹாங்காங்கும் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து நேபாளம் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாக்குரல், சாகர் பன் களமிறங்கினர். 

சிறப்பான தொடக்கத்தை அவர்கள் கொடுத்த போது, ஹாக்குரல் 22 ரன்னுக்கும், சாகர்பன் 11 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். 

அடுத்து களமிறங்கிய மல்லா மற்றும் கேப்டன் ஹத்கா நேபாள ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். மல்லா 48 ரன்னுடனும், ஹத்கா 41 ரன்னுடனும் வெ

ளியேறினர். 

அதன் பின் வந்த வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. பண்டரி 1, வெசாகர் 14, புதையர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். 

20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. இதையடுத்து 150 ரன் என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் இர்பான் அகமது டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் நிலைதடுமாறிய ஹாங்காங் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

வகாஸ் பர்கர் 18, கேப்டன் அட்கின்சன் 6, பாபர் ஹயாத் 20, சப்மேன் 13, நிஷாகத்கான் 0, ஐசாஸ்கான்0, அஜிப்அமர் 2, நதீம்கான் 5 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஹாங்காங் அணி இறுதியில் 17 ஓவரில்அனைத்து விக்கெட்டையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து நேபாளம் அணி 80 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

நேபாளம் அணி சார்பில் கவுச்சன் 3, ரெக்மி 3, சோம்பால்கமி 2, முகியா 1, ஹத்கா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக கவுச்சன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்