முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் மோதல்: 61 பேர் சாவு

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், ஏப்.13 - சிரியா-இராக் எல்லைப் பகுதியில் அல்புகமால் பகுதியில் இராக்கைச் சேர்ந்த தற்கொலைப்படைப் பிரிவினருக்கும், அல்-நஸ்ரா முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் ஐஎஸ்ஐஎல் பிரிவினரால் கொல்லப்பட்டதாக கருதப் படும் 10 பேரின் சடலங்களும் அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்று சிரியாவின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ராமி அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்த மோதலின் காரணமாக இராக்கின் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்