முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் முதல்வர் ராஜினாமா செய்ய கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

டேராடூன்,ஜூன்.17  - சுவாமி நிகமானந்த் மரணத்திற்கு பொறுப்பேற்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் ரமேஷ் பொஹிரியால் நிஷாங் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இந்தியாவில் கங்கை நதி புனித நதியாக கருதப்படுகிறது. கங்கை நதி நாளுக்கு நாள் அசுத்தம் அடைந்து வருகிறது. மேலும் கங்கை நதியை சுற்றிலும் கல்குவாரிகள் ஏராளமாக உள்ளன. கங்கை நதியை சுத்தப்படுத்தக்கோரியும் குவாரிகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் சுவாமி நிகமானந்த் சுமார் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்தார். அவரது இந்த மரணத்திற்கு உத்திரகாண்ட் மாநில பாரதிய ஜனதா அரசுதான் காரணம் என்றும் மாநில அரசு சுவாமி நிகமானந்த் உண்ணாவிரதம் இருந்ததை அலட்சியப்படுத்தியது என்றும் இதனால்தான் நிகமானந்த் மரணம் அடைந்தார் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நிகமானந்த் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மாநில முதல்வர் ஆர்.பி. நிஷாங் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில சட்டசபை காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கிஷோர் உபாத்யாய் கூறியுள்ளார். உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகமானந்துக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்பது உத்தரகாண்ட் அரசின் அலட்சியப்போக்கை காட்டுகிறது என்று உபாத்யாய் தெரிவித்தார். நிகமானந்த் மரணத்திற்கு முதல்வர் ஆர்.பி. நிஷாங் பொறுப்பேற்று உடனடியாக பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உபாத்யாய் மேலும் கூறினார். சுமார் 4 மாத காலம் உண்ணாவிரதம் இருந்த நிகமானந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 3-ம் தேதி மரணமடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்