முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணா மியான்மார் புறப்பட்டு சென்றார்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 21 - மூன்று நாள் அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று மியான்மார்  புறப்பட்டு  சென்றார். முன்பு பர்மா என்றழைக்கப்பட்டு வந்த மியான்மார் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. பிறகு சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு முதலாவது  மக்கள் ஆட்சி மலர்ந்துள்ளது.
அந்நாட்டின் அழைப்பை ஏற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று மியான்மார் புறப்பட்டு சென்றார். அவருடன்  வெளியுறவுத்துறை  செயலாளர் நிருபமா ராவும்  சென்றுள்ளார்.
மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததற்கு பிறகு இந்திய உயர்மட்டக்குழு ஒன்று மியான்மார் செல்வது இதுவே முதல் முறையாகும்.
மியான்மாரில்  அந்நாட்டு  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் , வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை கிருஷ்ணா  சந்தித்து பேச இருக்கிறார்.
அப்போது  இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து  மியான்மார் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.
மியான்மார் பிராந்தியத்தில்  சீனாவுக்கு ஒரு  முக்கிய இடத்தை  மியான்மார் அரசு அளித்திருப்பது குறித்தும் பேச்சு நடத்தப்படும் என்று தெரிகிறது.
தற்போது இந்தியாவுக்கும் மியான்மாருக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ளன.
மியான்மாரில் மேலும் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும்  கிருஷ்ணா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்