முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க-ஷிண்டே உறுதி

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜுன் - 22 - மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய மின்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மத்திய மின்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள மின்பற்றாக் குறையை போக்க மத்திய அரசு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களில் ஏற்படும் மின்சார பற்றாக்குறையை அந்தந்த மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. தமிழக முதல்வரின் கடிதம் கிடைக்கப்பெற்றதும் மத்திய தொகுப்பில் உள்ள இருப்புக்கு ஏற்ப தமிழ்நாட்டுக்கு தகுந்த மின்சாரம் வழங்க முடிவு செய்யப்படும்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மின்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத் தீர்க்கவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். மின்தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டங்களை வகுத்து அதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் கேட்டால் அந்த உதவிகளை செய்துதருவோம். தமிழ்நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டை போக்க தமிழக முதல்வர் புதிய திட்டங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்