முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரோஜர் பெடரர், டிஜோகோவிக், சானியா ஜோடி முன்னேற்றம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். - 25  -  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2 - வது சுற்றில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் டிஜோ கோவிக் ஆகியோர் வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் இரட்டையரில் சானியா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.  இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இதற்காக அவ ர்கள் தீவிரப் பயிற்சியுடன் வந்து இறங்கியுள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் போட்டி காலிறுதிக் கட்டத்தை நோக் கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித் து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரரும், பிரான்ஸ் வீரர் அட்ரியனும் மோதினர். 

இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெ டரர் 6 - 2, 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் அட்ரியனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

ஒற்றையர் பிரிவின் மற்றொரு இரண்டாவது சுற்றில், செர்பியாவின் முன்னணி வீரரான டிஜோகோவிக்கும், தென் ஆப்பிரிக்காவின் இளம்  வீரரான ஆண்டர்சனும் பலப்பரிட்சை நடத்தினர். 

3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் செர்பிய வீரர் 6 - 4, 6 - 2, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில், தெ. ஆ. வீரர் ஆண்டர்சனை வீழ் த்தி அடுத்த சுற்றுக்கு தாவினார். 

ரஷ்யாவின் அனுபவமிக்க வீரரான மிக்கேல் யோஸ்னி 2 - 6, 4 - 6, 4 - 6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் இளம் வீரரான சோம்தேவ் வர்ம னை வென்றார். இதன் மூலம் அவர் 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மகளிருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தி யாவின் சானியா மிர்சா மற்றும் ரஷ்யாவின் எலீனா ஜோடியும் அமெ ரிக்கா மற்றும் ரஷ்ய இணையும் மோதின. 

இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்ய ஜோடி அபாரமாக ஆடியது. இறுதியில் இந்த ஜோடி 6 -0 , 7 - 6 என்ற செட் கணக்கில் மெலனி மற் றும் அனா செக்வடசி இணையை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன் னேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்