முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினரால் தோற்றோம் - அன்புமணி ராமதாஸ்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.27 - சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க.வினரால்தான் தோற்றோம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம..க. இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, 

பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக அரசுகள் மாறி மாறி தான் வந்து கொண்டிருக்கின்றன. அது போலத்தான் இந்த தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. 

2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்த தேர்தலை பொருத்தவரை பா.ம.க.வுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள்தான். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2011 தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்கு காரணம் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்களின் எண்ணத்தை குறைவாக எடை போடக்கூடாது. எனினும் மக்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்