முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அணு ஆயுத விவகாரம்: அமெரிக்கா திட்டம்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஆக.7  - பாகிஸ்தானில் இருக்கும் அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள அமெரிக்கா ஒரு விரிவான திட்டம் வகுத்திருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருப்பதை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அவனை சுட்டுக்கொன்றுவிட்டது. அதிலிருந்து பாகிஸ்தான் மீது அமெரிக்காவுக்கு இருந்த சந்தேகம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனால் பாகிஸ்தானை இனிமேல் நம்பினால் மோசம் போயிவிடும் என்று அமெரிக்கா கருதுகிறது. இதனையொட்டி பாகிஸ்தானுக்கு கொடுத்து வரும் நிதி உதவியையும் அமெரிக்கா குறைத்துள்ளது. மேலும் பாகிஸ்தானிடம் அந்த நாட்டின் தகுதிக்கும் அதிகமாக அணுஆயுதங்கள் இருக்கின்றன. அந்த அணுஆயுதங்களும் அதை உற்பத்தி செய்யும் அணு உலைகளையும் தீவிரவாதிகளிடம் சென்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் சென்றுவிட்டால் அது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்தான் ஆபத்து. அதனால் பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளும் அணு ஆயுதங்களும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக செல்லும்பட்சத்தில் அவைகளை தம் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள அமெரிக்கா ஒரு விரிவான திட்டம் வகுத்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே இந்த திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. தினமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள அணுஉலைகளை தீவிரவாதிகள் எப்போதும் தாக்கும் சூழ்நிலை உள்ளது. அதனால் அவைகளை பாகிஸ்தான் ராணுவ பொறுப்பிலோ அல்லோது அமெரிக்க பொறுப்பிலோ வைத்துக்கொள்வது குறித்து திட்டம் வகுக்கப்பட்டது என்றும் அந்த அதிகாரிகள் கூறினர். பின்லேடனை சுட்டுக்கொலை செய்ததால் அல்கொய்தா தீவிரவாதிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது. அவர்கள் அணுஉலைகளை தாக்கலாம் என்றும் உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது. அணுஆயுத பாதுகாப்பை எடுத்துக்கொள்ள அமெரிக்கா முயன்றால் அது போருக்கு வழிவகுத்துவிடும் என்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்